பரதநாட்டிய கச்சேரிகளில் இளம் கலைஞர்கள் புடவை அணிந்து கொண்டு ஆடுவது மிகவும் சிரமமாக இருப்பதை அறிந்து கொண்ட நாட்டிய மேதை “#வழுவூர்ராமையாபிள்ளை” அவர்கள் இந்த புகைப்படத்தில் உள்ள நாட்டிய உடையை வடிவமைத்து இதற்கு “மாதவி மாடல்” என்று பெயர் வைத்தார். இவர் வடிவமைத்த மாடலை அடிப்படையாக வைத்துதான் தற்போது உள்ள மாடல்கள் வடிவம் பெற்றது. முதல் முதலில் தைத்து அணியும் நாட்டிய உடையை வடிவமைத்த பெருமை “#வழுவூர்ராமையாபிள்ளை” அவர்களையே சாரும். மேலும் திரைப்படத்துறையில் நாட்டியமாடிய நடிகைகள் பெரும்பாலும் இவரின் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது மேற்கூறிய தகவல்கள் திரைக் களஞ்சியம் என்ற நூலில் “#ஏவிஎம்மெய்யப்பசெட்டியார்” சரித்திரம் என்ற பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதாகும்.